முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மரணம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமானார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜெயந்த ராஜிநாமாச் செய்தமையினை அடுத்து, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக பேராசிரியர் விஷ்வ வர்ணபால நியமிக்கப்பட்டார்.
1936 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பேராசியர் விஷ்வ வர்ணபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக தனது அரசியலை ஆரம்பித்தார்.
முன்னாள் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டார நாயக்கவினால் 1980 ஆம் ஆண்டு, சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக வர்ணபால நியமிக்கப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர், உயர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்திருந்திருந்தார்.