தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

🕔 February 25, 2016

Uduwe thammaloka Thero - 014குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இவர் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டினையும் கோரியுள்ளார்.

குற்றப் புலானாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் தேரரின் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரமின்றி யானைக் குட்டியொன்றினை தன் வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், சட்ட மா அதிபரால் தம்மாலோக தேரர் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டினூடாக தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்