125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

🕔 February 24, 2016

Arrestசுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை விடுவிப்பதற்காக சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற சுங்கத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ் விடயம் தொடர்பில் மேலும் இருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதாகியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு வந்த பொருட்களை  1500 மில்லியன் ரூபா சுங்க வரியாகச் செலுத்தாமல் விடுவிப்பதற்காக, 125 மில்லியன் ரூபாவினை மேற்படி சுங்க அதிகாரிகள் லஞ்சமாகக் கோரியதாக குற்றசம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவே இலங்கையில் பெறப்பட்ட மிக அதிக தொகை லஞ்சம் எனக் கூறப்படுகிறது.

தொடர்பான செய்தி: 125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்