ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை

🕔 February 23, 2016

Rajitha - 011சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நாளை புதன்கிழமை சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் நிபுன் எகநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்

சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆயினும், சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமைபோல் இது ஓர் அவசர சத்திரசிகிச்சையல்ல என்றும் அமைச்சரின் ஊடக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்த நாளங்கள் இரண்டில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சத்திரசிகிச்சையின் மூலம் அந்த அடைப்புக்கள் அகற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், மருந்துகள் மூலம் இந்த அடைப்புக்களை நீக்கி விடமுடியும் என்று முன்னைய பரிசோதனைகளின்போது தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் நிபுன் எகநாயக்க கூறினார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகயீனம் அடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்