பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல்

🕔 February 18, 2016

Fonseka - 035
பீ
ல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவொன்று இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

மாற்றுக் கொள்கைளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் சபாநாயகர் ஆகியோர் மனுவில் பிதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்