அமெரிக்காவோடு மோதிய, ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் புற்ரோஸ் காலி மரணம்

🕔 February 18, 2016

Boutros Ghali - 908
க்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் புற்ரோஸ் புற்ரோஸ் காலி (Boutros Boutros Ghali) எகிப்து கெய்ரோ நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலமானார்.

இறக்கும் போது இவருக்கு 93 வயது.

எகிப்தின் கெய்ரோவில் 1922 ஆம் ஆண்டு நொவம்பர் 14-ம் திகதி காப்டிக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த புற்ரோஸ் காலி, 1992-ல் ஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இப்பதவிக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெயரை பெற்றார்.

ஐ.நா. செயலாளராக 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை, 05 ஆண்டுகள் இவர் பதவி வகித்தார். இரண்டாவது முறையாக இவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப் படுவதை பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்தது.

பொஸ்னியாவில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் குண்டுத் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக, அப்போதைய ஐ.நா. செயலாளரான புற்ரோஸ் காலி தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இதன் காரணாக, புற்ரோஸ் காலி மீது அமெரிக்கா கடுமையான கோயம் கொண்டிருந்தது. அதனால் அவரை இரண்டாவது தடவையாக அந்தப் பதவிக்குத் தெரிவாகாமல் அமெரிக்கா தடுத்தது.

ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூன், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே உட்பட உலகத் தலைவர்கள் பலர் புற்ரோஸ் காலி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்