இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர

உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;
“இலங்கை அணி தோல்வியைத் தழுவுவதற்கு, இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்புக்கள்தான் காரணமாக அமைந்தன.
எனினும் எதிர்வரும் போட்டித் தொடர்களின் போது அவ்வாறான பிரச்சினை ஏற்படாது.
இந்திய நடுவர்களை விடவும் நல்ல நடுவர்கள் எமக்குக் கிடைப்பார்கள்” என்றார்.