ஊடகவியலாளர் லசந்தவைக் கொன்றவர்களின் உருவங்கள் வெளியாகின; பொதுமக்கள் தகவல் வழங்கலாம்

🕔 February 17, 2016

Lasantha murder - suspects - 098
சி
ரேஸ்ட ஊடகவியலாளரும், சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான சந்தேச நபர்களின் உருவங்களையொத்த இரண்டு ஓவியங்களை வெளியிடப்பட்டுள்ளன.

கொலையாளிகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறும் நோக்கிலே மேற்படி ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பில் சாட்சிகள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி ஓவியங்களைத் தயாரித்துள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, மூன்று தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் 071 – 8591753, 071 – 8591770 மற்றும் 077 – 3291500 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொண்டு, சந்தேக நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும்.

லசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி, தனது வீட்டிலிருந்து பத்திரிகை அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்