யோசிதவின் பிணை மனு, 29 ஆம் திகதி விசாணைக்கு வருகிறது

🕔 February 17, 2016

Yositha - 976யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். அதிகாரிகள் நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மேற்படி நபர்களின் பிணை மனுக்கள் இன்னு புதன்கிழமை  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ, குறித்த மனுக்களை எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், கடுவெல நீதவான் நீதிமன்றிலுள்ள மேற்படி வழக்கு தொடர்பான ஆவணங்களை, கொழும்பு மேல் நீதிமன்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறும் நீதவான் பணிப்புரை வழங்கினார்.

இதேவேளை, பிணை மனு தொடர்பான விசாரணையின் போது, நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, பிரததிவாதிகள் இது தொடர்பில் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.

பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசிதவுடன், சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்