கல்முனையில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் உப காரியாலயம் அமைக்க முஸ்தீபு

🕔 February 16, 2016
Hakeem - 08764
– ஷபீக் ஹூஸைன் –

ல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல் அமைச்சுக்கு 2016ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், கல்முனை நவீன நகரமயப்படுத்தலுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப பணிகளை தொடங்குவது குறித்து, இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஆரம்ப பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, கல்முனையில் நகர திட்டமிடல் உப காரியாலயம் ஒன்றினை அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேவேளை, மீண்டும் ஓரிரு வாரங்களில் இது சம்பந்தமான கலந்துரையாடலொன்றினை மேற்கொள்வதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஸல்மான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ்,  அமைச்சின் மேலதிகச் செயலாளர்களான எம்.எச். முயூனுதீன், எல். மங்கலிகா, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல். லத்தீப், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி நிறுவன உயரதிகாரிகள் மற்றும் நீர்பாசன தினைக்களத்தின் உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.Hakeem - 08767Hakeem - 08768

Comments

புதிது பேஸ்புக் பக்கம்