துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

🕔 February 15, 2016

Nawsar fowsi - 09.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர்.

நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை 2012 ஆம் ஆண்டு துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் எடுக்கப்பட்டபோதே, நௌசர் பௌசிக்கு எதிரான மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், சில வருடங்களுக்கு முன்னர் நௌசர் பௌசி கைது செய்யப்பட்டிருந்தார்.

நௌசர் பௌசி – ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் புதல்வராவார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்