க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட அட்டவணை அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நொவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான பரீட்சை, டிசம்பர் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.
இந்த நிலையில் பரீட்சைகள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி – மீள ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (28) அறிவித்துள்ளது.
அதன்படி, விடுபட்ட பாடங்களுக்கான திருத்தப்பட்ட அட்டவணை பின்வருமாறு;
நொவம்பர் 27 அன்றைய பரீட்சை – டிசம்பர் 21ஆம் திகதி நடைபெறும்
நொவம்பர் 28 அன்றைய பரீட்சை – டிசம்பர் 23ஆம் திகதி நடைபெறும்
நொவம்பர் 27 அன்றைய பரீட்சை – டிசம்பர் 27ஆம் திகதி நடைபெறும்
நொவம்பர் 30 அன்றைய பரீட்டை – டிசம்பர் 28 அன்று நடைபெறும்.
டிசம்பர் 02 அன்றைய பரீட்சை – டிசம்பர் 30 அன்று நடைபெறும்
டிசம்பர் 03 அன்றை பரீட்சை – டிசம்பர் 31இல் நடைபெறும்