மூத்த அரசியல்வாதி ‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீன் காலமானார்

🕔 November 28, 2024

– சிரேஷ்ட ஊடகவியலாளர் சசுஐப் எம் காசிம் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் சிரேஷ்ட அரசியல்வாதியும், இலக்கியப் பரப்பில் வேதாந்தி என அறியப்பட்டவருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவரின் சொந்த ஊர் அக்கரைப்பற்றில் இன்று (28) காலமானார்.

தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், இலக்கியத் துறையில் அதீத நாட்டம் காட்டியவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுத்ததில் பிரதான பங்களித்தவர்.

1982ஆம் ஆண்டு, சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியான பின்னர், அவரின் தீவிர அரசியல் பிரவேசம் ஆரம்பானது.

1944 மே 12 இல் பிறந்த இவர், முஸ்லில் அரசியல் பரப்பில் வெகுவாகப் பேசப்பட்டவர்.

எம்.எச்.சேகு இஸ்ஸதீன் இலக்கிய உலகில் வேதாந்தி எனும் பெயரில் ஏராளமாக எழுதியுள்ளார். அரசியல் துறையில், இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர், ஊடகத்துறை பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அக்கரைப்பற்று தைக்கா மைய்யவாடியில் இன்று மாலை மஃரிப் (6.30) தொழுகையின் பின்னர் இடம்பெறும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்