க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தம்

🕔 November 26, 2024

ற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இடைநிறுத்தியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் பாதகமான காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நொவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகளே – இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (26) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆயினும் பரீட்சைகள் நொவம்பர் 30ஆம் திகதி (சனிக்கிழமை) மீண்டும் தொடங்கும் என்றும், முன்பு திட்டமிட்டபடி தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் திருத்தப்பட்ட அட்டவணைக்கு இணங்க டிசம்பர் 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்