நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

🕔 November 26, 2024

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2021ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கில், நீதிமன்றுக்கு சமூகமளிக்கத் தவறியமையினை அடுத்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன், பேஸ்லைன் வீதியில் விபத்தொன்றில் ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினை அடுத்து, குறித்த பிணையானையை நீதவான் பிறப்பித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்