புலிகளை அனுஷ்டிக்க முடியாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

🕔 November 26, 2024

டை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

போரினால் உயிரிழந்த தமது உறவினர்களை தனிநபர்கள் கௌரவிக்க முடியும் என்றும், ஆனால் விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது உருவங்களை காட்சிப்படுத்துவது உட்பட புலிகளை மகிமைப்படுத்தும் கொண்டாட்டங்கள் சட்டவிரோதமானது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் புலிகள் தொடர்பான அனுஷ்டிப்புகளுக்கு இடமில்லை என்றும், இந்த சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் விஜேபால வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்