சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு

🕔 November 26, 2024

சீரற்ற காலநிலையால் இலங்கையில் 12 மாவட்டங்களில் 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை நிலவரப்படி 526 குடும்பங்களைச் சேர்ந்த 1,696 நபர்கள் 20 பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக, நானுஓயாவிற்கு அப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் ரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

பெய்துவரும் கடுமையான மழையினால பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது:

Comments

புதிது பேஸ்புக் பக்கம்