வரவு – செலவுத் திட்டம், ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்: அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறும் எனவும், 03ஆம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் முதல்0 4 மாதங்களில் அரசாங்க செலவினங்களை ஈடுசெய்வதற்காக, கணக்கு வாக்கெடுப்பு ஒன்றை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கணக்கு வாக்கெடுப்பு டிசம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரித்தார்.