அய்ஷா ஜினசேன, மலர்மதி கங்காதரன் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இன்றைய தினம் (25) அமைச்சுகளுக்கான இரண்டு புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க கையளித்தார்.
இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சுகளுக்கான 18 செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்தப் பின்ணயிலேயே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.