10 கோடி ரூபாய் பெறுமதியான சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை 100 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை நொவம்பர் 11ஆம் திகதி காவலில் எடுத்து, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தி அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் எம்.பி.யின் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம், சட்டவிரோதமாக பொருத்தப்பட்டதாக (assembled) சந்தேகிக்கப்படுகிறது.