உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

🕔 November 23, 2024

ள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

“உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், இந்த ஆண்டு இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை” என்றார்.

“எனவே, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்