முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தேசியப்பட்டில் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நளீம், ஏறாவூர் நகர சபைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், அந்த இரு மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரை வென்றெடுத்தது.
அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு தேசியப்பட்டியல் கிடைத்தது.