விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, வைத்தியசாலைக்கு மாற்றம்

🕔 November 2, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டியில் வைத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரை பொலிஸார் கைது செய்தனர்.

நுகேகொட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை இம்மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரின் மனைவியின் வீட்டில், பதிவு செய்யப்படாத கார் ஒன்றை கண்டெடுத்த சம்பவம் தொடர்பில் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்