அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்

🕔 November 1, 2024

றுகம்பேயில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் – தீவிரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், திட்டமிட்ட குற்றத்துடன் தொடர்புடையது எனவும் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேரில் மாலைதீவு பிரஜையொருவரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குகின்றனர். அதில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையுடன் தொடர்புடையவராவார். ஈரானிய பிரஜை ஒருவர் சந்தேக நபர்களுக்கு நிதி உதவி வழங்கி அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேரை கைது செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில், பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொண்டா உள்ளிட்ட குழுவினர் – அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தீவிரவாத செயல்களை விட குறிப்பிட்ட சிலரின் செயல்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட இந்தத தகவல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சாதகமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதன் அவசியத்தை கேள்வி எழுப்பி அண்மையில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனை குறித்தும் இலங்கை பிரதிநிதிகள் இதன்போது கவலை தெரிவித்துள்ளர்.

மேலும், குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதை வலியுறுத்திய குழுவினர், அமெரிக்கா விடுத்த பயண ஆலோசனையை நீக்குமாறும் கோரியுள்ளனர்.

தொடர்பான தொகுப்பு: ‘அறுகம்பே’யிலுள்ள இஸ்ரேலியர்களின் Chabad House || இஸ்ரேலியரின் தொந்தரவுக் களியாட்டங்கள் || Puthithu

Comments

புதிது பேஸ்புக் பக்கம்