மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

🕔 February 12, 2016

Sobitha thero - 0900றைந்த மாதுலுவாவே சோபித தேரருக்கு சிசிக்சையளித்த சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய மிகுதிக் கட்டணத்தினை, அரசாங்கம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதற்கான, அனுமதியினைக் கோரும் குறை நிரப்பு பிரேரணையொன்று நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சோபித தேரருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டமைக்கான கட்டணத்தில், மிகுதியாக 17.2 மில்லியன் செலுத்த வேண்டியுள்ளது.

மேற்படி வைத்தியசாலைக் கட்டணத்தினை, வெளிவிவகார அமைச்சு செலுத்தவுள்ளது.

இதனைச் செலுத்துவற்கான அனுமதியினைக் கோரும் குறை நிரப்பு பிரேரணை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்