மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை

🕔 February 12, 2016

Paddy - Mattale - 091த்தல சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 3000 மெற்றிக் தொன் நெல், அடுத்த 03 வாரங்களுக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என்று, நெற் சந்தைப்படுத்தும் சபை நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது.

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லில், 509  மெற்றிக் தொன் நெல் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டுள்ளதாகவும் நெற் சந்தைப்படுத்தும் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய நிறுவனமொன்று மேற்படி தொகை நெல்லினை கடந்த மாதம் கொள்வனவு செய்திருந்தது.

இதேவேளை, விமான நிலையத்தில் மொத்தமாக வைக்கப்பட்டுள்ள 4054 மெற்றின் தொன் நெல்லையும் அகற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை கூறியுள்ளது.

மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகளில் நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு எதிராக, ஹம்மாந்தோட்ட மாவட்ட மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்