ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் – இஸ்ரேல்: அப்படி நடந்தால் நசுக்குவோம் – ஈரான்

🕔 October 2, 2024

ஸ்ரேலில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை நோக்கி ஈரான் சரமாரியாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதை அடுத்து, அதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸா மற்றும் லெபனான் மீதான கொடிய தாக்குதல்களுக்கும், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது.

மேலும், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள, மூன்று இராணுவ தளங்களை தமது ஏவுகணைத் தாக்குலில் குறி வைத்ததாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில் மீது ஏவப்பட்ட 80 சதவீத ஏவுகணைகள் – இலக்குகளை தாக்கியதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தமது தாக்குதலுக்கு பதில் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டார், இஸ்ரேல் ‘நசுக்கும்’ அடியை எதிர்கொள்ளும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்வதால், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: இஸ்ரேல் மீது ஈரான் 100 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்: 20 யுத்த விமானங்கள் நாசம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்