இஸ்ரேல் மீது ஈரான் 100 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்: 20 யுத்த விமானங்கள் நாசம்
இஸ்ரேலில் உள்ள முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகள் மீது ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் 100 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘நசுக்கும்’ தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலில் F-35 யுத்த விமானங்கள் தாக்குலொன்றில் அழிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இஸ்ரேல் தனது துருப்புக்கள் தெற்கு லெபனானில் ‘வரையறுக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதற்காக நுழைந்ததாகத் தெரிவித்திருந்தது. ஆனால் இஸ்ரேலிய ராணும் எல்லைக்குள் நுழைந்ததை ஹிஸ்புல்லா மறுத்தது.
லெபனான் “அதன் வரலாற்றின் மிகவும் ஆபத்தான கட்டங்களில் ஒன்றை எதிர்கொள்கிறது” என்று அந்த நாட்டின் பிரதமர் நஜிப் மிகாட்டி கூறியுள்ளார்.