‘அரகலய’ தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே, குமார வெல்கம மரணித்தார்: முன்னாள் எம்.பி. பியல் நிஷாந்த சர்ச்சை தகவல்

🕔 October 1, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு அரகலய போராட்டத்தின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே, அவருக்கு மரணம் ஏற்பட்டதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

“2022 மே 09 ஆம் திகதி அரகலயவை ஆரம்பித்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியதில் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வெல்கமவுக்கு அரகலயவின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

நேற்று (30) நடைபெற்ற குமார வெல்கமவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அரகலய போராட்ட காலத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குமார வெல்கம, 2022 மே 09 அன்று தாக்குதலுக்கு உள்ளானார்.

74 வயதுடைய குமார வெல்கம கடந்த 28ஆம் திகதி காலமானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்