புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்கள் இல்லை: மொத்த அமைச்சர் தொகை பற்றிய தகவலும் வெளியீடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் எனும் பதவிகள் இனி இருக்காது என, அமைசரவைப் பேச்சார் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தை அறிவிக்கும் முதலாவது ஊடக சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.
மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அதிகபட்சமாக அமைச்சர்களின் அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.