பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு: நள்ளிரவு அமுலுக்கு வருகிறது
எரிபொருள்களுக்கான விலைகளில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படுவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை – லீட்டருக்கு 21 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 311 ரூபாய். டீசல் லீட்டருக்கு 24 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 283 ரூபாய்.
சுப்பர் டீசலின் விலையும் 33 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையை புதிய விலை 319 ரூபாய். மண்ணெண்ணெய் லீட்டருக்கு19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 183 ரூபாய்.
இருப்பினும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.