நாடாளுமன்றத் தேர்தலுக்கு 1100 கோடி ரூபாய் செலவாகும்
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட பணிகள் குறித்து இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தலைமையில் – தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள், பிரதி மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதற்கு ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
2024.11.14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கும், 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி வரையான காலப் பகுதி வேட்புமனுப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.