ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டு விட்டார் என, இஸ்ரேல் அறிவிப்பு

🕔 September 28, 2024

ஹிஸ்புல்லா அமைப்பின் ஹசன் நஸ்ருல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து எந்தக் கருத்தையும் ஹிஸ்புல்லா வெளியிடவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழி தாக்குதலில் – ஹிஸ்புல்லாவின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஹசன் நஸ்ருல்லா இறந்துவிட்டார்’ என்று – இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேர்னல் நடவ் ஷோஷானி இன்று சனிக்கிழமை X இல் அறிவித்தார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியேவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த பாரிய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் தெற்கு முன்னணியின் தளபதி அலி கார்க்கி மற்றும் ஹிஸ்புல்லாவின் மேலதி தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

பல வான்வழித் தாக்குதல்கள் குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – கடந்த திங்கள் தொடக்கம் தீவிரமாக நடத்தி வரும் குண்டுவீச்சு தாக்குதலில் லெபனான் முழுவதும் 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்