பொதுத் தேர்தலில் போட்டியிடும் செய்தி குறித்து அமான் அஷ்ரப் விளக்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் – நடைபெறவுள்ள பொதுத் தெர்தலில் போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அமான் அஷ்ரப் இன்று (28) தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு எந்தவொரு கட்சிக்கும் தான் இதுவரை வாக்குறுதி வழங்கவில்லை எனவும் அவர் உறுதிபடக் கூறினார்.
இதேவேளை, “பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உங்களுக்கு உள்ளதாஃ” என, அவரிடம் கேட்டபோது; “அதுகுறித்து இப்போதைக்கு எந்தக் கருத்தையும் கூற முடியாது” எனப் பதிலளித்த அமான் அஷ்ரப், பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் பொவதாக இப்போதைக்கு பரவி வரும் செய்திகள் பொய்யானவை என்றார்.
இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதவிவொன்றை இட்டுள்ள அவர்; ‘அமான் அஷ்ரப்பின் முடிவு – அமான் அஷ்ரப்பைத் தவிர அனைவருக்கும் தெரிகிறது. எப்போதாவது எனது அரசியல் இணைவு குறித்து தெரிவிக்க முடிவு செய்தால், அதை இங்கே அறிவிப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.