அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 02 மாவட்டங்களில் தனித்துப் போட்டி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – இரண்டு மாவட்டங்களில் தனித்தும் ஏனைய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளது.
அம்பாறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, அந்தக் கட்சியின் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.
2020ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 43,319 வாக்குகளைப் பெற்று, ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.