கப்பம் பெற்ற நான்கு பொலிஸார் கைது

🕔 September 18, 2024

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பு – முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4 ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.

அதன்படி, கொழும்பு – புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கொன்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவர், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்