தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது

🕔 February 11, 2016

Sajith Premadasa - 01
– அஷ்ரப் ஏ. சமத் –

ம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் வீடற்ற மூவரைக் கொண்ட குடும்பபொன்று, அங்குள்ள மையவாடியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் பிள்ளை அந்த மையவாடியில் குப்பி லாம்பில் தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஒரு சோக வாழ்க்கையினை கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகை ஆக்கமாக வெளியிட்டது.

இந்த ஆக்கத்தை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று புதன் கிழமை அக்குடும்பத்தினரை வீடமைப்பு அமைச்சுக்கு அழைத்து, வீடொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு 02 இலட்சம் ரூபா காசோலையினை வழங்கி வைத்தாா்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், செவன  உதவித் திட்டத்தின் கீழ் – இலவசமாக வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கும் நிதியிலிருந்து இந்தப் பணம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே, மேற்படி குடும்பத்தின் நிலை பற்றி அறிந்த ஒருவர், அந்தக் குடும்பத்திற்கென காணித்துண்டொன்றை வழங்கியிருந்திருந்தார்.

மேற்படி குடும்பத்துக்கான வீடு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கம்பஹா மாவட்ட முகாமையாளரின் கண்காணிப்பின் கீழ், தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னராக நிர்மாணிக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்