நாடாளுமன்றில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்றில் இன்று (03) மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன.
பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை அமுல்படுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டமூலம், மற்றும் தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் திருத்தச் சட்டமூலம் ஆகியவைவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியங்கள் திருத்தச் சட்டமூலமானது, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 17 ஆயிரம் ரூபாயாக உயர்தியுள்ளது.
அதே சமயம் குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டமூலமான, ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாதிக்கு இழப்பீடு வழங்குவதற்கு முன் – விசாரணை ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது.