அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு

🕔 September 3, 2024

விவசாய செயற்பாடுகளுக்காக விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்து பயிர்ச்செய்கைக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று – விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க -சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவர் தலைமையிலான அரசாங்கம் – விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்