இஸ்ரேலிய இனப்படுகொலை; காஸாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: 41.1 வீதமானோர் குழந்தைகள்
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 40,534 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 93,778 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 07ஆம் திகதியன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது, இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 40,000க்கும் அதிகமானோரில் 18.4 சதவீதம் பேர் பெண்கள், 41.1 சதவீதம் பேர் குழந்தைகள்.
காஸாவில் ஒக்டோபர் 07க்கு முனர் இருந்த இரண்டு மில்லியன் மக்கள்தொகையில், கிட்டத்தட்ட பாதிப் பேர் குழந்தைகளாவர்.
கொல்லப்பட்ட 40,000 க்கும் மேற்பட்டவர்களில், கிட்டத்தட்ட 17,000 பேர் குழந்தைகளாவர். அவர்களைக் கொண்டு 550 வகுப்பறைகளை நிரப்ப முடியும்.
தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள், இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.