ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம்

🕔 February 11, 2016

Jayantha Jayasuriya - 0854னாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

அந்தவகையில், இவர் இலங்கையின் 29 ஆவது சட்ட மா அதிபராவார்.

மேலதிக சொலிட்ட ஜெனரலாகப் பதவி வகித்த ஜயந்த ஜயசூரியவின் பெயரை, புதிய சட்ட மா அதிபர் பதவிக்காக, அரசியமைப்புப் பேரவை நேற்று சிபாரிசு செய்திருந்தது.

முன்னைய சட்ட மா அதிபர் யுவன்ஜன ஜவஹர்லால் வனசுந்தர, கடந்த மாதம் 10 ஆம் திகதி தனது ஓய்வு பெற்றமையினை அடுத்து, சட்ட மா அதிபர் பதவி வெற்றிடமானது.

புதிய சட்டமா அதிபராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ஜயந்த ஜயசூரிய, 1983 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணைந்து சேவையாற்றி வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்