சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு

🕔 February 10, 2016

Jayantha Jayasuriya - 01புதிய சட்ட மா அதிபராக மேலதிக சொலிசிட்டர் ஜனரல் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை சிபாரிசு செய்துள்ளது.

அரசியலமைப்பு சபை இன்று புதன்கிழமை மாலை கூடியபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபராகக் கடமையாற்றிய யுவன்ஜன வனசுந்தர, அண்மையில் ஓய்வு பெற்றமையினை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமானது.

1983 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணைந்த ஜயந்த ஜயசூரிய, 2012 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆக தரம் உயர்த்தப்பட்டார்.

இவர் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்