கிழக்கின் கேடயத்தின் கோரிக்கைகள், தேசிய மக்கள் சக்தியிடம் கையளிப்பு

🕔 August 14, 2024

– நூருல் ஹுதா உமர் –

ருபத்தியொரு (21) வயதுக்குள் அடிப்படை தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைத்தல் வேண்டும், வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை தேசிய மக்கள் சக்தியிடம் – கிழக்கின் கேடயம் தலைவர் எம்.எஸ். சபீஸ் இன்று (14) கையளித்தார்.

தேசிய மக்கள் சக்தியினரின் அழைப்பின் பேரில் – கிழக்கின் கேடயம் அமைப்பினருடனான சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் ராஜகிரிய தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைக்கும் கோரிக்கைகளை கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் – தேசிய மக்கள் சக்தியிடம் கையளித்தார்.

கிழக்கின் கேடயம் தேசிய மக்கள் சக்தியிடம் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு;

01. 21 வயதுக்குள் அடிப்படை (3S) தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைத்தல். அதனை உற்பத்தி பொருளாதாரம், முயற்சியான்மை, கடல்சார் நீரியல் வளங்கள், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இணைந்ததான திட்டங்களை உருவாக்குதல்.

02) கிழக்கு மாகாணத்தின் வளங்களை மையப்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் (கைத்தொழில் பேட்டைகள்) உதாரணம் ; மருதமுனையில் நெசவு தொழில்சாலை, ஒலுவிலில் டின் மீன் தொழில்சாலை)

03) வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல்.

04) கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிர்வாக பயங்கரவாதம் மற்றும் காணிப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தரல்.

05) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சட்ட மற்றும் கல்வி பீடத்தினை ஆரம்பித்தல்.

06) அனைத்து மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமையக்கூடியவாறு மக்களுடன் தேவையுடைய அரசாங்க காரியாலயங்களை நிறுவுதல். உதாரணமாக அடையாள அட்டை,கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம்)

07) இலங்கையின் சுற்றுலாத் துறை கேந்திர நிலையங்களாக இருக்கின்ற அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இடங்களை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல்.

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அந்தக் கட்சியன் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்