40 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
கட்டுப்பணம் செலுத்தியோரில் – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், மற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ஒருவரும், சுயேட்சை வேட்பாளர்17 பேரும் அடங்குவர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரைமேற்கொள்ளப்படும்.