ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி எம்.பி வாபஸ் பெற்றார்
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த, காலி மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் பிரியதர்ஷன, தனது முடிவை வாபஸ் பெற்று உத்தியோகபூர்வமாக பொதுஜன பெரமுனவுக்கு திரும்பியுள்ளார்.
திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தின் போது, இவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்றும், தனது சொந்த வேட்பாளரைபொதுஜன பெரமுன நிறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்திய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மொஹான் பிரியதர்ஷனவும் ஒருவராவார்.