ஹுசைன் கிளம்பினார்

🕔 February 10, 2016

Prince Husain - 01க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்யட் ராஅத் அல் ஹுசைன், தனது விஜயத்தினை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து இன்று புதன்கிழமை புறப்பட்டார்.

இலங்கைக்கு கடந்த 06 ஆம்திகதி சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஹுசைன், இன்று அதிகாலை 3.00 மணியளவில் இலங்கையிலிருந்து கிளம்பினார்.

தன்னுடைய இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு ஆணையாளர் ஹுசைன் சென்றிருந்தார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மதப் பெரியார்களையும் மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்