அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

🕔 July 18, 2024

ரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள அவர்; அரசாங்கம் கேம் அடிப்பதற்காக காலம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று (18) பேசிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

”ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் ஜூலை மாதம் 17ஆம் திகதியின் பின்னர் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள போதிலும், ஏன் மாத இறுதி வரை இருக்க வேண்டும். 17ஆம் கதிதி கடந்து ஏன் இன்னும் 10, 15 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு ‘கேம்’ அடிப்பதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது என்பது, இதன் ஊடாக தெளிவாகியுள்ளது. அதுவே உண்மை. அரசு அதிகாரிகள் எதற்காக திரும்புகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம் ” எனவும் அவர் கூறியுள்ளார்.

ராகு காலத்தை (சுப நேரம்) பார்த்து தேர்தலுக்கான திகதியை அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி கூறியுள்ளார். அவருடைய கருத்து தொடர்பில் நான் வியப்படைந்தேன். அவ்வாறானது ஒரு சம்பிரதாயமும் இல்லை. அரசாங்கத்துக்கு ‘கேம்’ அடிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் ஊடாக ‘கேம்’ அடிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது” என்றார்.

மேலம்10, 15 நாட்கள் அரசாங்கத்துக்கு காலம் வழங்கவே முயற்சிக்கப்படுகிறது. திரைக்கு பின்னால் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தலை மிக விரைவாக நடத்துமாறு கூறப்படுகிறது. எனினும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம் அல்லவா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்