நாட்டை விட்டு 1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

🕔 July 17, 2024

நாட்டிலிருந்து1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17) சென்றிருந்தபோது அவர் இதனைக் கூறினார்.

இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் 3,500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ளதாவும், அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றனர், இதனால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக்கூடியதாக உள்ளது.

தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர். எனினும் தற்பொழுது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சினையாக உள்ளது.

துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 – 15 வரையிலான வைத்தியர்கள் மீண்டும் வந்து, பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்