ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

🕔 July 17, 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

டயானா கமகேயினுடைய சட்டத்தரணிகள், இந்த வழக்கை டயானா தொடர விரும்பவில்லை எனக் கூறி, மனுவை வாபஸ் பெற்றுள்ள்னர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்த்து வாக்களிப்பது என, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த நிலையில், அந்த திருத்தத்துக்கு ஆதரவாக டயானா கமகே வாக்களித்ததை அடுத்து, அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர், பிரித்தானிய பிரஜாவுரிமையைக் கொண்ட டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதாகவும், அது அரசியலமைப்புக்கு முரணானது என்பதால் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரியும் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய, டயானா கமகே அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்