பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனின் இரண்டு கைத்துப்பாக்கிகள் 55 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை

🕔 July 11, 2024

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனுக்குச் சொந்தமான இரண்டு கைத்துப்பாக்கிகள் ஏலத்தில் 1.4 ஸ்ரேலிங் பவுன் (இலங்கை பெறுமதியில் 55 கோடி ரூபாய்) தொகைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

அவர் ஒருமுறை இந்தத் துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய எண்ணியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் துப்பாக்கி தயாரிப்பாளரான லூயிஸ்-மரின் கோசெட் என்பவர் இந்த துப்பாக்கிகளை உருவாக்கியிருந்தார்.

1814 இல் நெப்போலியன் பதவி இழந்ததை அடுதது தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

பிரான்ஸ் கலாச்சார அமைச்சு சமீபத்தில் மேற்படி கைத்துப்பாக்கிகளை தேசிய பொக்கிஷங்கள் என வகைப்படுத்தி, அவற்றின் ஏற்றுமதியை தடை செய்ததை அடுத்து, அவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த துப்பாக்கிகளில் நெப்போலியனின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

1814 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இரவு, வெளிநாட்டுப் படைகளால் நெப்போலியனின் ராணுவம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்த போது, அந்தப் துப்பாக்கிகளால் தற்கொலை செய்ய முயன்றார்.

இருப்பினும், அவரின் அதிகாரி துப்பாக்கி ரவையை அகற்றியதை அடுத்து, நெப்போலியன் விஷம் அருந்தினார்; ஆனாலும் உயிர் பிழைத்தார்.

பின்னர் அவர் கைத்துப்பாக்கிகளை அவரின் அதிகாரியிடம் கொடுத்தார், அவர் அவற்றை தனது சந்ததியினருக்கு வழங்கினார்.

நெப்போலியன் 1815 இல் மத்தியதரைக் கடல் தீவான எல்பாவுக்கு நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து – மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஆனால் வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்டார்.

அவர்இரண்டாவது தடவை தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள செயின்ட் ஹெலினா தீவுக்கு. நாடுகடத்தப்பட்ட பின்னர்,1821 இல் இறந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்